வழமைக்கு மாறாக அன்று வானம் கறுத்துக் கிடந்தது. தூரத்தில் கார்முகில்கள் திரண்டு மழைக்குணமாய் இருந்தது. கார்த்திகை 27. இது கல்லறைகள் பூப்பூக்கும் மாதம். அதனால்த்தான் என்னவோ வானம் இப்பிடி கிடக்குது. சந்திரன் போன கிழமைதான் தடுப்பில இருந்து வெளியில வந்திருந்தான்.கிட்டத்தட்ட இரண்டு வருசம் இருண்ட உலகத்தில் அவனது வாழ்க்கை கரைந்துபோனது. சந்திரன் கடைசி நிமிசம் வரை வெளியில வருவான் எண்டு நம்ப இல்லை. எல்லாம் கெட்ட கனவு போல நடந்து முடிந்து விட்டது. "என்னப்பா யோசிச்சு கொண்டு இருக்கிறியள்?அதுதான் எல்லாம் முடிஞ்சு போச்சுதே.. இனிமேல் எண்டாலும் உங்கட எதிர்காலத்தை நினைச்சு நடவுங்கோ.. "சந்திரனின் மனைவி இதை சொல்லும் போது அவளது கண்களில் ஏதோ வெறுமை தெரிந்தது. "இல்லடி, இண்டைக்கு ஏதோ மனம் ஒருமாதிரி இருக்கு. மனசு வலிக்குது. நான் ஒருக்கா கடற்கரைப்பக்கம் போட்டு வாறன்." என்று சொன்ன சந்திரன் மனிசியின் பதிலுக்கு காத்திராமல் "டேய் சிலம்பரசன், அப்பான்ர சேட்டை ஒருக்கா எடுத்து வா" என்றான். Read more